யாக்கை திரி - FAQ
கதைக்கு FAQவா? அப்படினு தோணலாம். ஆனால் இந்த கதையை வாசித்த வாசகர்கள் சிலருக்கு இந்த சந்தேகங்கள் இருக்கக்கூடும்னு ஒரு எண்ணம். ஏன்னா இதுவரை இரண்டு மூன்று பேர் குறிப்பிட்ட இதே கேள்விகளை கேட்டாங்க..
எனக்கு பொதுவாகவே கதைகளில் எல்லாவற்றுக்கும் ஒரு விளக்கம் கொடுக்க வேண்டும் என்பதில் உடன்பாடில்லை. சிலதை வாசிப்பவரின் கற்பனைக்கு விடுவதே சரியென நம்புகிறேன். ஒரு கதையை வாசித்துவிட்டு அதை மெல்ல மெல்ல ரசித்து ரசித்து அசைபோடுவதே தனி சுகம்தானே? அத்தனையும் சொல்லிட்டா, வாசித்து முடித்து உட்கார்ந்து யோசிக்க ஒன்னுமே இருக்காதே? (ஒரு வாசகியா என்னுடைய தனிப்பட்ட அபிப்பிராயம். I believe it creates a connection between the reader and the writer)
அதைவிட உன்னோட இந்த கதையை வாசித்தேன், 'இது' இதனால்தானா? என துளிரக்கூடிய பேச்சு எவ்வளவு சுவாரஸ்யமிக்கவை?
அதனாலேயே பொதுவாக சில விடயங்களை வாசகர்களின் கற்பனைக்கு விடுவது வழக்கம். ஆனால் ஒன்றுக்கும் மேற்பட்ட வாசகர்கள் இதே கேள்வியைக் கேட்கும்பொழுது, இங்கேயும் சிலருக்கு இந்த கேள்விகள் இருக்கக்கூடுமோ என்ற சந்தேகம். அதிலும் அமைதியாகக் கதையை வாசிக்கும் சைலண்ட் ரீடர்ஸ்க்கு இதே சந்தேகங்கள் இருந்தால் அது ஒரு உறுத்தலாகவே தங்கிவிடக்கூடுமே என்று தோன்றியது.
மக்களே, உங்கள் கேள்விகளையும் கருத்துக்களையும் என்னிடம் தயங்காமல் பகிர்ந்துகொள்ளலாம். Feel free to share your thoughts.
இப்பொழுது கேள்விகளும் பதில்களும்:
1. அவ்வளவு காலமும் வெள்ளை காற்றாகச் சுற்றிக்கொண்டிருந்த திரிபுரன் எப்படி பவளா வந்த பிறகு உருவம் பெற்றான்?
பவளா திரிபுரன் எனும் ஆன்மாவின் நங்கூரம். அவனை இப்பூலோக வாழ்க்கையுடன் பிடித்து வைக்கக் கூடிய ஒரே ஆள் அவள்தான். முதல் முதலாக இந்த கொலைகளால் பாதிக்கப்பட்டவளும் அவளே. இது விதியின் பிணைப்பு. அதனால்தான், அவள் கண்டுகொள்ளாமல் சுற்றியவரை காற்றாக இருந்தவன், அவள் கவனம் திரும்பிய நொடி உருவமாகினான்.
2. அப்போ ப்ரஃபஸர் பரமார்த்மனுக்கு எப்படித் தெரிந்தான்?
பவளா, திரிபுரன், பரமார்த்மன் என்ற மூவரின் வாழ்க்கையுமே ஏதோ ஒரு விதத்தில் ஒன்றுடன் ஒன்று பிணைந்தது. Their fate were intertwined.
வாழ்க்கை பல சமயங்களில் ஒரே வட்டத்திற்குள் சுழலக்கூடியது.
உதாரணத்திற்கு.. நீங்கள் பால் காய்ச்சவென்று அடுப்பில் ஏற்றுகிறீர்கள். அங்கேயே நின்று பார்க்கவும் செய்கிறீர்கள். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையிழந்து, இந்த ஒரு வேலைதானே? அதற்குள் வந்துவிடலாம் என்று நகர்ந்த சமயம் பால் பொங்கி விடுகிறது!
வீணாக சிந்திய பால் உங்களை உறுத்த அடுத்த முறை பாலை அடுப்பில் ஏற்றும்பொழுது அங்கேயே கால் கடுக்க நிற்க முடிவெடுக்கிறீர்கள். நிற்கவும் செய்கிறீர்கள். ஆனால் இம்முறை உங்கள் கவனம் அங்கேயே அடுக்களைக்குள் அதனிடத்தில் இருந்து காணாமல் போயிருந்த கரண்டியைக் கவனித்து புருவம் சுருங்கி யோசிக்கத் தொடங்குகையில் பால் மீண்டும் பொங்கி விடுகிறது!
இம்முறை கடுப்பின் உச்சத்திற்குச் செல்லும் நீங்கள் அடுத்த முறை கண் பார்வையை பாலில் இருந்து அகற்றாமல் இருக்க முடிவு செய்கிறீர்கள். Life goes in circles.
வாழ்க்கை சில பேட்டர்ன்களை நாம் கற்ற பாடம் புரிந்து மாற்றிக்கொள்ளும்வரை மாற்றுவதில்லை. அதே சம்பவங்களையும் சூழ்நிலைகளையும் நம்மை நோக்கி வீசிக்கொண்டே இருக்கின்றன. அதே போலத்தான் இங்கு திரிபுரனுக்கும்.. குற்ற உணர்ச்சியில் தூசு படிந்து சிக்கி கிடந்த அவனது வாழ்க்கை கடிகாரம் மீண்டும் பவளா கைப்பட்டுச் சுற்ற தொடங்குகையில், விதி மீண்டும் அதே சூழலில் அவனைக் கொண்டு வந்து நிறுத்துகிறது. He must go through it to make it out alive.
அதை அவனும் அவளும் எப்படிப் பயன்படுத்திக்கொண்டனர் என்பதுதான் யாக்கை திரி.
(எப்போ எழுதின கதைக்கு எப்போ வந்து போஸ்ட் போடறா பாருனு என் மைன்ட் வாய்ஸே கேட்குது.. என்ன பண்ண நிலமை அப்படி இருக்கு)

Comments
Post a Comment