மணமகன் ஜாக்கிரதை - 2

✍️ எழுதியவர் Gowri

2




ஜூலை 2025


காராக்ரே வாசதே லஷ்மி

கரமத்யே சரஸ்வதி

கரமூலேது கோவிந்தா 

ப்ரபத்தே கரதர்ஷனம்

சிறு வயது முதலான வழக்கப்படி  கண்விழிக்கும்  போதே  கைகள் இரண்டையும்  பார்த்தபடி மனம் தன்னாலே இந்த ஸ்லோகத்தை சொல்ல எனது நாளைத் தொடங்க எழுந்தேன். அம்மம்மாவின் பழக்கம் இது. என்னை வளர்த்ததெல்லாம் அம்மம்மா தான். திருமதி சுலோச்சனா ராஜசிங்கம் திருவாளர் ராஜசிங்கத்தின் பிஸினஸ் பார்ட்னர் என்பதால் பெரும்பாலும் அவருடனே தான் இருப்பார். இருவரும் ஸ்வாசிப்பதே பணத்திற்காகத் தான்.


பணம்...... அது அத்யாவசியம் தான். அது இல்லாமல் எதுவும் இல்லை தான். ஆனால் தேவைக்கு அதிகமாக இருந்தும் அடுத்தவன் வாழக்கூடாது என்று எண்ணி போட்டிபோடும் அளவுக்கு அத்யாவசியமில்லை என்பது என் எண்ணம். என்னைத் தவிர மற்ற மூவருக்கும் இந்தக் கருத்தில் முரண்பாடு உள்ளதால் நான் மட்டும் எப்போதுமே தனி தான். என்னுடன் எப்போதுமே ஒத்துப் போவது அம்மம்மாவும் தாத்தாவும் தான். என்னைப் பெற்றவர்கள் பிஸினஸில் பிஸியாக இருக்க நான் அம்மம்மாவின் அரவணைப்பில் வளர்ந்தேன்.


"எனக்காக காலைல எழுந்துக்கும் போது இது மட்டும் சொல்லு கண்ணா." அம்மம்மாவின் கோரிக்கையை நான் என்றுமே மறுத்ததும் இல்லை, மீறி நடந்தது மில்லை. வழக்கமாக விடியும் போதே எக்கச்சக்கமான டென்ஷன் இருக்கும். இன்று அது எதுவுமே இல்லை.‌சொல்லப் போனால் இன்று மிகவும் முக்கியமான நாள். இன்று எனது டிசைன்களைப் பார்க்கவும் அதுபற்றியான விரிவான பேச்சு வார்த்தைக்கும் என்னை பிரபல ஃபேஷன் டிசைனிங் கம்பெனியான ஃப்ளோரா டிசைனர்ஸ் வரச் சொல்லி இருந்தார்கள். ஆக, இன்று எனக்கு ஒருவித பரிட்சை போலத் தான். 


சொல்லப் போனால் எனது ஐந்து வருட போராட்டத்திற்கான ஒரு திருப்புமுனை தான் இன்று. இந்தப் போராட்டத்தில் நான்‌ பலரை இழந்து தனித்து நின்றாலும் ஏனோ நிமிர்ந்து வாழக் கற்றுக் கொண்டேன். ஆரம்பத்தில் ரொம்பவுமே தடுமாறித்தான் போனேன். ஒரு வேகத்தில் வீட்டில் அனைவரிடமும் சண்டையிட்டு வந்துவிட்டாலும் சில நேரங்களில் அவசரப்பட்டுவிட்டோமோ என்று தோன்றினாலும், யார் வேண்டாம் என வந்தது தவறில்லை என்று தான் இந்த வரைக்குமே உறுதியாக தோன்றியது. பெற்ற மகள் எப்பேர்ப்பட்ட நிலையில் வந்து நின்று அழுதபோதும் அவ்ருக்கு அவருடைய பிஸினஸும் பணமும் செல்வாக்கும் தான் பெரிதென்றால் அவரும் தேவை இல்லை அவருடனே ஒத்துப்போகும் எவருமே தேவை இல்லை.


அன்று நான் என்ன நிலைமையில் நின்று அழுதேன், பெற்றவர்களிடம் என்ன எதிர்பார்த்தேன்? இத்தனைக்கும் நான் ஒன்றும் தவறு செய்யவில்லையே. எனக்கு நடந்த கொடுமையை நான் வந்து சொல்லும்போது பெற்றவர்களுக்கு கொதித்துப் போகாதா? அவ்வளவுக்கா  பணமும் பேரும் முக்கியமாகப் போயிற்று? போகட்டும், இவர்களும் தேவை இல்லை, இவர்கள் சம்பாதித்து வாய்த்த ஸோ கால்டு பணம் சொத்து பெயர் அந்தஸ்து என்று எதுவுமே தேவை இல்லை. எனக்குத் தேவையான நேரத்தில் எனக்கு ஆறுதலாகப் பேசாத, எனக்காக குரல் கொடுக்காத யாருமே எனக்குத் தேவையே இல்லை.


ஆயிற்று , மதுரையை விட்டு வந்து ஐந்து வருடங்கள். இதுவரைக்கும் நான் எங்கு இருக்கிறேன் இருக்கிறேனா இல்லையா என்று கூட அவர்கள் யாருக்கும் தெரியாது. இப்போது பெங்களூரில் வசிப்பு. ஒரு பெண் இளவயதில் தனித்து வாழ்வதென்பது சற்றே சவால் தான். ஆனால் முடியாத செயல் அல்ல. கொஞ்சம் பல்லைக் கடித்து வாழப் பழகி விட்டால், அதன்பின் அந்த சுதந்திரம் தரும் தைரியமும் தன்னம்பிக்கையும் வாழக்கையை எங்கேயோ கொண்டு செல்லும்.


எனது சந்திப்பு மதியம் இரண்டு மணிக்கு மேல் தான் என்பதால் காலை முழுதும் எனக்கானது தான். நிதானமாக காலைக்கடன்களை முடித்துவிட்டு சமயலறைக்குள் நுழைந்தேன். ஒற்றை படுக்கை அறை கொண்ட சின்ன அபார்ட்மெண்டை வாடகைக்கு எடுத்திருந்தேன். ஆரம்பத்தில் பிஜியில் ஹாஸ்டெலில் எனதங்கிக்கொண்டேன். ஓரளவு சம்பாதிக்கத் தொடங்கியதும் தனியே வீடெடுத்துக் கொண்டேன். 


பத்துக்கு பத்து கொண்ட ஓபன் கிட்சன் இது. ஹாலில் டீவியில்  எம் எஸ் அம்மாவின் பாடல்களை ஓடவிட்டபடி இன்றைய மெனுவை யோசிக்கத் தொடங்கினேன். திடீரென அம்மம்மாவின் கைமணத்தில் நன்கு குழைந்த மிளகுப் பொங்கலும் சாம்பாரும் சட்னியும் நினைவுக்கு வர மெனு முடிவாகியது. நிதானமாக எம் எஸ்ஸின் தேன் குரலில் கரைந்தபடியே சமையலை தொடங்கினேன். சட்னிக்குத் தாளிக்கும்போது எனது அலைபேசி எனது கவனத்தைக் கலைக்க அதனிடம் விரைந்தேன்.


எனது ஒரே தோழியும் எனது டிசைனிங் பார்ட்னருமான வினிதாவின் அழைப்பு தான். அழைப்பை எடுக்கும்போதே "கிச்சன் குயின் ! என்ன ஸ்பெஷல் பண்ணிட்டு இருக்க?" என்கவும் என்னை அறியாமல் உதிர்ந்த சிரிப்புடன் "ஹ்ம்ம். பழையதும் ஊறுகாயும். வர்றியா?" என்றேன் சீண்டலாக. "நீ குடுத்தா எதுனாலும் ஓகே தானே பேப்ஸ்." என்றாள் சிரித்துக் கொண்டே. அவளுக்கு நன்கு தெரியும் எனக்கு இந்த டார்லிங் சுவீட்டி பேபி பேப்ஸ் டியர் இதெல்லாமே அலர்ஜி என்று.

"உனக்கு பழைய சாதம் கூட கிடையாது போடா" என்றேன் வேண்டுமென்றே. "அம்மா தாயே! தப்பு தான். நீ என்ன சீண்டின, நானும் பதிலுக்கு சீண்டலாமேன்னு தான் அத சொன்னேன். வாயிதலடிச்சிரத தாயீ. பெண்பாவம்  பொல்லாதது. அதுவும் என்னோட பாவம் பசியினால. அது ரொம்பவே பொல்லாதது. ப்ளீஸ். வெளில தான் இருக்கேன் கதவை திற " என்றால் கெஞ்சலாய். 'அப்படி வா வழிக்கு' என்று மனசுக்கு நினை கொண்டே, கதவை திறந்தேன்.


கதவு திறந்ததுமே என்னை பாய்ந்து வந்து கட்டிக்கொண்டாள் வினு. அவள் எப்போதுமே இப்படித்தான். என்னிடம் பாசம் கொஞ்சம் ஓவர்டோஸ் தான். ஐந்தரை அடி பூங்கொத்து தான் வினி. பால் நிறம். பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் தோன்றும் கருவிழிகள். சாட்டை போன்ற இடைவரை நீண்ட கூந்தலை எப்போதுமே பின்னலிட்டிருப்பாள். "யாராவது பாத்தா என்னவோ பலவருஷம் கழிச்சு நாம பத்துக்கறதா நினைக்க போறாங்க. எரும! நேத்து நயிட்டு தானே பாத்தோம்." என்று நான் அலுத்துக்கொள்ள, "அதென்னவோ உன்ன பாத்தாலே ஒரு ஹக் கொடுக்கணும்னு தோணுதுல்ல ஷிவு. ஐ ஹவ் ஆல் தி ரைட்ஸ் . எவன் என்னைக் கேள்வி கேட்கமுடியும்?" என்றபடி வேண்டுமென்றே அணைத்துக் கொண்டாள்.


"வாவ்! ஒரே பசி. நேத்து நைட்டு நீ செஞ்சு குடுத்த பாஸ்தா சாப்டது. அதுக்கப்றமோ ஒண்ணுமே சாப்பிடல. வினி பாப்பா பாவம். பசிக்குது. இங்க நெய்வாசனை ஆளை தூக்குது. வா ஷிவு எனக்கு சாப்பாடு வச்சுதா." என்றபடி கிட்ச்சனை நோக்கிப்போகும் அவளை என்ன செய்ய என்றெண்ணிய படியே பின் சென்றேன். "அது நைட்டு இல்ல. இன்னிக்கு அதிகாலை மூன்று மணி. என்னவோ நாள்கணக்கா பட்னி கிடந்தாப்ல பேச்சப்பாரேன்." அலுத்துக் கொண்டபடி அவளுக்கு அவளது ஃபேவரைட் பிளேட்டில் சுடச்சுட பொங்கலும் சாம்பாரும் பரிமாற, சாம்பாரை தொட்டு சாப்பிடக்கூடாது ஷிவு, சாம்பார்ல பொங்கல் முங்கனும். அப்போதான் டேஸ்ட்." என்று சிலாகித்தபடி மேலும் இரண்டு கரண்டி ஊற்றிக்கொண்டு போய் ஹால் சோஃபாவில் சம்மணமிட்டு கொண்டமர்த்து பொங்கலை ஒரு கைபார்க்கலானாள். 


ரிசெப்ஷனில் இருந்த பெண் எங்களது விபரங்களைக் கேட்டு சரிபார்த்து உள்ளே அனுப்பும்பொழுது நேரம் சரியாக இரண்டு. எங்களை சந்திக்க வேண்டிய திருமதி ராதிகா வெளியில் வந்து வரவேற்று அழைத்து சென்றார். "மிஸ்டர் சேனா உங்களை பத்தி ரொம்ப பெருமையா பேசிருக்கார். ஐயம் ஹாப்பி டு மீட் ஹிஸ் ஃபேவரைட் ஸ்டூடெண்ட். பொதுவா அவர் எந்த ஸ்டூடெண்ட் பதியும் இவ்வளவு பேசி நான் பாத்தது இல்லை. யூ மஸ்ட் ட்ரூலி பீ கிரேட் இன் டிசைனிங்." என்று ஆரம்பித்தவர், எங்களது ப்ரெசென்ட்டேஷன் மற்றும் டிசைன் ப்ரோபைலை பார்த்து முடிக்கும் வரைக்கும் எதுவுமே சொல்லவில்லை.


ஒருவழியாக எல்லாம் முடிந்ததும், அவர் எழுந்து வந்து என் கைகளை பற்றிக்கொண்டு "யூ ட்ரூலி ஆர் எ டிசைன் ஜீனியஸ். மிஸ்டர் சேனா ஐஸ் வெரி கரெக்ட். அம ஹாப்பி டு கொலாபொரேட் வித் யூ. லெட் அஸ் டிஸ்கஸ் தி கான்ட்ராக்ட் டீடைல்ஸ்" என்கவும் "வாவ்!" என்று துள்ளிக் குதித்தாள் வினி. எல்லாம் முடிந்து வெளிவரும்போது மாலை ஆறு மணி. "எனக்கு செம்மையா பசிக்குது  ஷிவு. வா எதாவது கொறிக்கலாம்." என்று சிறுபிள்ளையாய் என்கைகளை பிடித்துக்கொண்டு தொதூங்கத்தொடங்கின. பசி வந்துவிட்டால் வினி அப்படிதான். மற்ற நேரம் எனக்கே தைரியம் சொல்லும் அளவுக்கு ரொம்பவே மெச்சூர்ட் பேர்சன்.


சோசியல் மீடியாவில் ரொம்பவே ஹைப்பை ஏற்படுத்திய ஒரு பெரிய ரெஸ்டராண்ட்டை அடைந்தோம். "நிக்கக்கூட இடமில்லை. இங்க தான் சாப்பிடணுமாடா?" எனக்கு கூட்டமே அலர்ஜி. ஆனால் வினிக்கு அதெல்லாம் ஒருபொருட்டே அல்ல. அவ முடிவு செஞ்சுட்டா செஞ்சது தான். நீ இங்க வெயிட் பண்ணு ஷிவு. நான் போய் கீ பொடி தோசையும் உனக்கு வழக்கம் போல இட்லியும் வாங்கிட்டு வரேன் " நான் பதில் அளிப்பதற்கு முன்பே கூட்டத்தில் கலந்து விட்டால். இவள் வர நேரமாகும் என்பதால் வெளியே நோட்டமிட்டபடி இருந்தேன். பீப்பிள் வாட்சிங் ஒரு அருமையான எனக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு. தான் கவனிக்கப் படுகிறோம் என்று தெரியாத பொது மனிதன் உண்மையான குணத்தை வெளிப்படுத்துவான்.


எதிர் திசையில் மரத்தடியில் ஒரு சின்ன கடை. கடை என்றால் கட்டிடமெல்லாம் இல்லை. ப்லாட்போரத்தில் கோணியை விரித்து பூங்கொத்துகளை கடைபரத்தி இருந்தனர். சுமார் இருபது வயதுதானிருக்கும் அந்த பெண்ணிற்கு . அவளது கைகளில் தான் எத்தனை வேகம்! பரபரவென பூங்கொத்துகளை அவள் கட்ட அவளது கணவன் அங்கு சிக்னலில் நிற்கும் வண்டிகளிடம் சென்று விற்க முயலுகிறான். இதில் அவனது இடுப்பில் அழுகையுடன் ஒரு குழந்தை வேறு. யாரும் வாங்குவது போலில்லை. இருந்தும் விடாமல் ஒவ்வொரு வண்டியாய் சென்று இறைஞ்சும் குரலில் அவன் கேட்பது நெஞ்சை பிசைந்தது. 


மனது கேளாமல் எதிர் திசைக்கு ரோட்டைக் கடந்து சென்று அவனிடம் பேரம் பேசாமல் இரண்டு பூங்கொத்துகளை வாங்கிக்கொண்டேன். ஐநூறு ரூபாய் தாளை அவனிடம் திணித்துவிட்டு அவனது "திதி! மேடம்!" எதையுமே காதில் வாங்கிக்கொள்ளாமல் ரோட்டைக் கடந்து வந்து வினி சொல்லிச்சென்ற இடத்தில் நல்ல பிள்ளையாய் நின்று கொண்டேன்.


"கொஞ்சநேரம் நான் போய் சாப்பாடு வாங்கிட்டு வர்றதுக்குள்ள என்ன பண்ணி வச்ச ஷிவு?" என்கைகளில் இருந்த பூங்கொத்துகளை ஆர்வமும் கேள்வியுமாய் பார்த்தபடியே வந்தாள் வினி. என்னிடம் பதிலேதும் இல்லாமல் போக எதிர்த்திசையை பார்த்தவள் "ஓஹ்! அந்த பாப்பாவை பாத்ததும் ஸிம்பத்தி வந்துருச்சோ?" என்றவளை ஒருமுறை முறைத்தவுடன் "சாரி ! புரியுது. நீயும் இந்த ஊருக்கு வந்த புதுசுல சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்ட தான். இனி நோ கொஸ்டின்ஸ். அகைன் சாரி. இந்த உன்னோட இட்லி. என்னோட பொடி தோசைக்கிட்ட வந்துறாத." என்றாள். எனக்கு வடிவேலுவின் இந்த கோட்டை தாண்டி நீயும் வராத நானும் வரமாட்டேன் டயலாக் நினைவுக்கு வர அவளை பார்த்து சிரித்தபடியே இட்லியை காலி செய்தேன்.


பிளேட்டுகளை அப்புறப்படுத்திவிட்டு வந்த வினியிடம் ஒரு பூங்கொத்தை நீட்டி "ஃபார் ஆல் யுவர் ஹார்டுஒர்க், யூ டிசேர்வ் மோர் தான் திஸ். வினி" என்றேன். ரோடுன்னு பாக்கலையே பயபுள்ள அப்படியே பாஞ்சு என்ன கட்டிக்கொண்டாள். தோள் குலுங்குவதை வைத்து அவள் அழுகிறாள் என்று புரிந்துகொண்டேன். "லவ் யு ஷிவு. நீ மட்டும் இல்லைனா இன்னிக்கு நான் இல்ல. தேங்க்ஸ் டா ஷிவு" அழுகை நிற்பதாய் தெரியவில்லை. "ஒய்! அழுமூஞ்சி உனக்கு பொக்கே கிடையாது. குடு இங்க" என்று சீண்ட, "இப்போ தான் யாரோ மோர் தான் திஸ் எல்லாம் சொன்னாங்க. அந்த மானஸ்திய யாராவது பாத்திங்களா" என்றால் வீம்புடன். வினி பேக் டு போர்ம்.


வினியை ஒருவழியாக சமாதானப்படுத்தி, வரும் வழியில் ஒரு ஐஸ் கிரீமை வாங்கிக் கொடுத்து அவளது ரூமில் விட்டுவிட்டு வீடு வந்து சேரும்போது மணி எட்டரை. கீழே செக்யூரிட்டி  "மேடம் உங்களுக்கு ஒரு போஸ்ட் வந்துருக்கு " என்று என்னிடம் ஒரு பெரிய பிரவுன் கவரை நீட்டினார். நமக்கு யார் இத அனுப்பிருப்பா என்ற யோசனையில் படிகளில் ஏறி என்னுடைய வீட்டினை அடைந்தேன். உள் நுழைந்ததும் மற்றது மறந்து வழக்கப்படி ஒரு குளியலை போட்டுவிட்டு வந்து டீவியை ஓடவிட்டபடி அறையில் பார்வையை ஓட்ட மீண்டும் பார்வையில் பட்டது அந்த கவர். இப்போது ஆர்வம் அதிகமாக கவரைப் பிரித்தேன். என் உலகம் ஸ்தம்பித்து நின்றது.

— “மணமகன் ஜாக்கிரதை” கதையிலிருந்து ஒரு பகுதி  

✍️ எழுத்தாளர்: Gowri  

இந்தக் கதை முழுவதும் இவ்வலைதளத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது



முந்தைய அத்தியாயம்  |  அடுத்த அத்தியாயம்

📖 இந்த தொடரின் அத்தியாயங்கள்

Comments