🌿 Featured Story

அன்பில் அவன் அலாதி

கோடைக்கால நினைவுகளின் கதை.

📖 Read Story

🎧 Audiobooks

Listen to our stories while travelling, resting or dreaming.

Enter Our Audio Story World

Romance, thrillers, healing stories & emotional journeys, now in audio form.

🌿 Fresh Updates

New chapters, articles, announcements & story updates.

மேவுகடல் நானுனக்கு | யஞ்ஞா

மேவுகடல் நானுனக்கு

📘 மேவுகடல் நானுனக்கு

✍️ எழுத்தாளர்: யஞ்ஞா
வகை: Romance

இந்த தொடர் யஞ்ஞா அவர்களின் சொந்த படைப்பு.
இவ்வலைதளத்தில் மட்டுமே அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது.


📖 கதையின் அறிமுகம்

பார்வை சாளரம் வழி தெரிந்த எதிர்வீட்டு மரத்திலேயே நிலைத்து நின்றது. கரண்ட் கம்பிகள் பின்ன நிற்கும் மரங்களும் பூத்துக் குலுங்கத்தான் செய்கின்றன. ஒரு மெல்லிய ஊத காற்றொன்று தொட்டுரசிச் சென்றது. எது நான்? இந்த பிணித் தாங்கும் உடலா? வலி மறைக்கும் முகமா? உணர மறுக்கும் உயிரா? வேடமிட்டு தன்னையே மூடிக்கொள்ளும் உணர்வா? பல ரசாயன மாற்றங்களை என்னுட் பிரபஞ்சத்தினுள் நித்தமும் நிகழ்த்தும் இந்த வயதா? என்றோ யாரோ செய்த அவமானங்களின் மிச்சமா? இல்லை பாராட்டுக்களின் பகுதியா? உடல் உருக்கி உழைத்து வரும் பலனின் ஒரு துளியா? இல்லை பெற்று வளர்த்தவர்கள் வைத்த பெயர் என்ற வெறும் எழுத்துக்களில் அடங்கிவிடும் சத்தமா? இதில் எதை விரும்புகிறேன் என்று வந்து நிற்கிறாய் நீ? எது நான்? எது நீ? கடைசியில் நாம் அனைவரும் வெறும் காற்றை உள்ளிழுத்து விழுங்கிக்கொள்ளும் சதைகள்தானா? ஆம், வெறும் சதைதான். உணர்வுகள் ஒட்டிக்கொள்ளாதவரை எனக்கு அத்தனை மனிதர்களும் வெறும் சதைதான். நீயும் வெறும் சதைதான்! அந்த மாயத் துளியொன்று ரத்தமென விழும்வரை.. எங்கோ விழுந்திருக்க வேண்டிய கதிரொளி உன் நெற்றி முத்தம் கேட்கும்வரை. விழியோரங்கள் சுருங்கும் உன் சிரிப்பை நான் பார்க்காதவரை. என் சலனங்களில் கால் நனைக்க நினைக்காதே உன்னை எந்த நொடியும் விழுங்கிவிடத் துடிக்கும் ஆழியின் வேட்கையை அடி நாக்கில் அடக்கி வைத்திருக்கும் நதியோர நாணல் என் மனம். நீ என்னை எதுவாக வேணாலும் நினைத்துக்கொள், நான் உன்னை எனதாக மட்டும் நினைத்துக்கொள்கிறேன் என்று மேவித் தவிக்கும் ஆசைகளை அடக்க மட்டும் தெரிந்துவிட்டால் நானும் வெறும் சதையே.


📚 அத்தியாய பட்டியல்


📌 நிலை: 🟢 தொடர்கதை (Ongoing series)

© 2026 – Yagnya
இந்த தொடர் முழுவதும் இவ்வலைதளத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.